செய்திகள்

பாதாள குழுக்களுடன் தொடர்பு: சிக்கப்போகும் பிரபல அரசியல்வாதிகள்!

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள், பெயர் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல்வாதிகள் , முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதாள உலக கும்பல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கடந்த சில நாட்களாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார்.