செய்திகள்

பாதாள குழுவினரை தேடி இன்று முதல் கொழும்பில் விசேட நடவடிக்கை…………!

கொழும்பு மற்றும் புற நகர் பகுதிகளில் பாதாள உலக குழுவினருக்கிடையேயான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி விசேட படையணியொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முதல் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படையணி செயற்படவுள்ளதுடன் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை இதன்போது தேடி நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.

இதேவேளை கொழும்பு நகரில் பாதாள குழுவினர் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் வீதித் தடைகளை போட்டு சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

N5