செய்திகள்
பாதாள குழுவினரை நாட்டுக்கு வரவழைத்து தற்போது ”கடிக்கிறதே , கடிக்கிறதே” என அரசாங்கம் கூச்சலிடுகிறது : மஹிந்த
எமது ஆட்சிக்காலத்தில் நாட்டிலிருந்து சென்ற பாதாள குழுவினரை அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக மீண்டும் நாட்டுக்கு வரச் செய்துவிட்டு இப்போ கடிக்கிறதே என அரசாங்கம் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்களுக்கு முடிவு கட்டினால் பாதாள குழுக்களையும் ஒழிக்க முடியும். அப்போ பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ஷ பாதாள குழுக்களை இல்லாது செய்ய நடவடிக்கையெடுத்திருந்தார்.
ஆனால் கடந்த தேர்தல் காலத்தில் சில அரசியவாதிகள் தமது தேவைகளுக்காக பாதாள குழுக்களை அழைத்து வந்துவிட்டு இப்போ கடிக்கிறதே , கடிக்கிறதே என கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். என மஹிந்த தெரிவித்துள்ளார்.
n10




