பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள அரசு இதயசுத்தியுடனான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையகத்திற்கு வாக்களித்தபடி நிலைமாற்றுக்கால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்குவது குறித்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடனான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என தமிழ் சிவில் அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை வெளிவிலகாரஅ அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். காணமற்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொறுப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது போல தோன்றுகின்றது. நிலைமாற்றுக்கால நீதி பொறிமுறைகளை ஏற்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை கலந்தாலோசிப்பதற்கு நேர்மையான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்ற துரதிஸ்டவசமான முடிவிற்கு நாங்கள் வரவேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் உருவாக்கப்படும் காணமற்போனவர்கள் அலுவலகம் ஏற்றுக்கொள்ளபட முடியாதவொன்று என நாங்கள் உறுதியாக தெரிவிக்கின்றோம் என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் தமிழ் வடிவம்
காணமற்போனோர் அலுவகத்தை அமைப்பது உட்பட நிலைமாற்றுக்கல நீதிக்கான பொறிமுறைகளை ஏற்படுத்துவது குறித்த கலந்தாலோசனைகளை மேற்கொள்ளும் பொறுப்பு நல்லிணக்க பொறிமுறைகளை ஓருங்கிணைக்கும் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.எனினும் காணமற்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொறுப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது போல தோன்றுகின்றது.
முன்னதாக நல்லிணக்க பொறிமுறைகளை ஓருங்கிணைக்கும் செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஆணை பலவீனமாக காணப்பட்டது,மேலும் போதிய வளங்கள் காணப்படாமையினால் அதன் செயற்பாடுகள் போதியவையாக காணப்படவில்லை,சிறிதளவு முன்னேற்றம் கூட அதனால் ஏற்படவில்லை.
இந்த நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு காணமற்போனோர் அலுவலகம் குறித்து அவசர அவசரமாக இதயசுத்தியற்ற கலந்தாலோசனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முயல்கின்றது போல தென்படுகின்றது. சேயலணியை அலட்சியப்படுத்தும் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கை அது குறிப்பிட்ட செயலணியை ஓரு கருவியாக ஆணவப்போக்குடன் பயன்படுத்த முயல்வதை புலப்படுத்துகின்றது.
இது உண்மை,நீதி நஸ்டஈடு மீள நிகழாமை, என்பவற்றை ஊக்குவிப்பதற்கான விசேட ஆணையாளர் இலங்கைக்கு 2015 ஏப்பிரலில் விஜயம் செய்த வேளை வலியுறுத்திய கருத்துகளிற்கு எதிரான செயலாகும்,அவர் அவ்வேளை பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசனைகள் மிகமுக்கியனவை. அவர்களின் பங்களிப்பில்லா தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இலங்கைக்கான தனது இரண்டாவது விஜயத்தின் போதும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். பாதிக்கப்பட்டவர்களுடனான கலந்தாலோசனைகள் மிக முக்கியமானவை அதன் மூலம் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களிற்கு அது குறித்த அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் வாழ்பவர்களுடனும் கலந்தாய்வு நடவடிக்கைகள் அவசியம் என பல தடைவ வலியுறுத்தப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதற்கு மறுத்து வருகின்றது.
இதன் காரணமாக நிலைமாற்றுக்கால நீதி பொறிமுறைகளை ஏற்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை கலந்தாலோசிப்பதற்கு நேர்மையான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்ற துரதிஸ்டவசமான முடிவிற்கு நாங்கள் வரவேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் உருவாக்கப்படும் காணமற்போனவர்கள் அலுவலகம் ஏற்றுக்கொள்ளபட முடியாதவொன்று என நாங்கள் உறுதியாக தெரிவிக்கின்றோம்.
பி- காணமற்போனவர்களா அல்லது பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்களா?
பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் என்பது சர்வதே அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றம். அதேவேளை காணமற்போனவர்கள் என்பது பொதுவான சொல். காணமற்போனவர்கள் என்பது பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் என்பதின் கீழ் அடங்காது என்பதற்கான சிறந்த உதாரணம். மோதலின் போது காணமற்போன இலங்கை இராணுவத்தினர்.
காணமற்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் ஆணை நிலைமாற்றறுக்கால நீதி நடைமுறையின் ஓரு பகுதியாக காணப்படவேண்டும்என்றால். அது படையினர்,அரசு மற்றும் அரசசாரத குழுக்கள் அகியவற்றினா மேற்கொள்ளப்பட்ட பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதல் தொடர்பிலானதாக காணப்படவேண்டும்.
மோதலின் போது காணமற்போன படையினர் குறித்த விபரம் முக்கியத்துவமற்றதல்ல ஆனால் அது தனியான விடயம்,அதனை பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதலுடன் இணைத்து நோக்க கூடாது.
சி- காணமற்போனோர் அலுவலகத்தின் கூட்டமைவு
சர்வதே பங்களிப்பு காணப்படாவிட்டால் காணமற்போனோர் அலுவலகம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினமான விடயமாக அமைந்துவிடும்.வடகிழக்கில் படையினர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி வருவதை கருத்தில்கொள்ளும்போதும் தெற்கில் படையினரிற்கு அளிக்கப்படும் கௌரவத்தை கருத்தில்கொள்ளும்போதும் முற்றுமுழுதாக இலங்கையர்கள் மாத்திரமே காணப்படும் காணமற்போனோர் அலுவலகம் ஆhதாரங்களை தேடிச்செல்லும் சாட்சியங்களை பதிவு செய்யும் என்பது குறித்து கற்பனைகூட செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.தங்கள் நேர்மை, பக்கச்சார்பின்மை, சுயாதீனம், தொழில்சார் தன்மை என்பவற்றிற்கு பெயர் போன நிபுணர்கள் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே காணமற்போனவர்கள் அலுவலகம் உரியளவிற்கு வலுப்படுத்தப்படும்.
ஐக்கியாநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்த கலப்பு பொறிமுறைக்கான காரணம் இதுவே என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இதன் காரணமாக காணமற்போனோர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு பொருத்தமான நபர்களை பரிந்துரைசெய்யுமாறு அரசாங்கம் ஐக்கியநாடுகளை கோரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம், மேலும் பாதிக்கப்பட்வர்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம்களின் பிரதிநிதிகளாக அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு நியமிக்கப்படவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
காணமற்போனோர் அலுவகத்தை அமைப்பது உட்பட நிலைமாற்றுக்கல நீதிக்கான பொறிமுறைகளை ஏற்படுத்துவது குறித்த கலந்தாலோசனைகளை மேற்கொள்ளும் பொறுப்பு நல்லிணக்க பொறிமுறைகளை ஓருங்கிணைக்கும் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.எனினும் காணமற்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொறுப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது போல தோன்றுகின்றது.
முன்னதாக நல்லிணக்க பொறிமுறைகளை ஓருங்கிணைக்கும் செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஆணை பலவீனமாக காணப்பட்டது,மேலும் போதிய வளங்கள் காணப்படாமையினால் அதன் செயற்பாடுகள் போதியவையாக காணப்படவில்லை,சிறிதளவு முன்னேற்றம் கூட அதனால் ஏற்படவில்லை.
இந்த நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு காணமற்போனோர் அலுவலகம் குறித்து அவசர அவசரமாக இதயசுத்தியற்ற கலந்தாலோசனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முயல்கின்றது போல தென்படுகின்றது. சேயலணியை அலட்சியப்படுத்தும் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கை அது குறிப்பிட்ட செயலணியை ஓரு கருவியாக ஆணவப்போக்குடன் பயன்படுத்த முயல்வதை புலப்படுத்துகின்றது.
இது உண்மை,நீதி நஸ்டஈடு மீள நிகழாமை, என்பவற்றை ஊக்குவிப்பதற்கான விசேட ஆணையாளர் இலங்கைக்கு 2015 ஏப்பிரலில் விஜயம் செய்த வேளை வலியுறுத்திய கருத்துகளிற்கு எதிரான செயலாகும்,அவர் அவ்வேளை பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசனைகள் மிகமுக்கியனவை,அவர்களின் பங்களிப்பில்லா தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இலங்கைக்கான தனது இரண்டாவது விஜயத்தின் போதும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். பாதிக்கப்பட்டவர்களுடனான கலந்தாலோசனைகள் மிக முக்கியமானவை அதன் மூலம் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களிற்கு அது குறித்த அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் வாழ்பவர்களுடனும் கலந்தாய்வு நடவடிக்கைகள் அவசியம் என பல தடைவ வலியுறுத்தப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதற்கு மறுத்து வருகின்றது.
இதன் காரணமாக நிலைமாற்றுக்கால நீதி பொறிமுறைகளை ஏற்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை கலந்தாலோசிப்பதற்கு நேர்மையான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்ற துரதிஸ்டவசமான முடிவிற்கு நாங்கள் வரவேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் உருவாக்கப்படும் காணமற்போனவர்கள் அலுவலகம் ஏற்றுக்கொள்ளபட முடியாதவொன்று என நாங்கள் உறுதியாக தெரிவிக்கின்றோம்.
பி- காணமற்போனவர்களா அல்லது பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்களா?
பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் என்பது சர்வதே அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றம், அதேவேளை காணமற்போனவர்கள் என்பது பொதுவான சொல்,காணமற்போனவர்கள் என்பது பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் என்பதின் கீழ் அடங்காது என்பதற்கான சிறந்த உதாரணம்,மோதலின் போது காணமற்போன இலங்கை இராணுவத்தினர்.
காணமற்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் ஆணை நிலைமாற்றறுக்கால நீதி நடைமுறையின் ஓரு பகுதியாக காணப்படவேண்டும்என்றால்,அது படையினர்,அரசு மற்றும் அரசசாரத குழுக்கள் அகியவற்றினா மேற்கொள்ளப்பட்ட பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதல் தொடர்பிலானதாக காணப்படவேண்டும்.