செய்திகள்

பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தத்திற்கு திட்டம் ? : ஜே.வி.பி குற்றச்சாட்டு

அமெரிக்காவுடன் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு நீடிக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரயாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் யுத்த நிலைமைகளின் போது இருநாடுகளுக்கிடையேயும் உதவிகளை  பெற்றுக்கொள்ளும் வகையில் எமது நாட்டு பாதுகாப்பு அமைச்சும் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சுக்குமிடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு சபைக்கே அல்லது மக்களுக்கோ தெரியாமலே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.  10 வருட காலப்பகுதிக்கே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிணங்க 2017 மார்ச் 5ஆம் திகதியுடன் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது. இப்போ மேலும் 10 வருடங்களுக்கு ஒப்பந்தத்தை நீடிக்க  தற்போதைய அரசாங்கம் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவே எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு இடமளிக்க முடியாது இதனை நீடிப்பது அமெரிக்காவுக்கே நன்மையாக அமையும். இந்த ஒப்பந்தத்தினூடாக யுத்த நிலைமைகளின் போது அமெரிக்காவின் போர் கப்பல்கள் மற்றும் விமனங்களுக்கு இங்கு வர முடியும். இதற்கு இலங்கை கட்டுப்பட்டதாகவும் இருக்கும். இலங்கையின் இறைமைக்கே பாதிப்பாக அமையும். இதனால் இந்த ஒப்பந்தத்தை தொடரும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். என  அவர் தெரிவித்துள்ளார். -(3)