செய்திகள்

பாரத லக்‌ஷ்மன் கொலை தொடர்பான தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய தீர்மானம்

பாரத லக்‌ஷ்மன் கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மேன் முறையீடு செய்வதற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி விரைவில் அந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி அனுல பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட போது அங்கிருந்த நீதியரசர்கள் குழாமில் ஒருவர் குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெறுவதாக அறிவித்த போதும் மற்றைய நீதியரசர்கள் இருவர் 8 பேரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாகவும் துமிந்த சில்வா உள்ளிட்ட 4  பேருக்கும் மரண தண்டனை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மேன் முறையீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளாரர்.   –(3)