செய்திகள்

பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை கொண்டுவரத் திட்டமிடும் பொதுஜன பெரமுன!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவினரின் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக பாராளுமன்றத்தில் யோசனையொன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் திட்டத்தில் அவர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என இவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை கூறி வருகின்றனர்.

அத்துடன், பொதுத் தேர்தலின் ஊடாகவே கட்சியை மீள பலமாக கட்டியெழுப்ப முடியும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு இவர்கள் அழுத்தமும் கொடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்காவிட்டால் பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
-(3)