செய்திகள்

பாராளுமன்றமே சுகாதார ஒழுங்குவிதிகள் சட்டத்தை மீறுவது எந்த வகையில் நியாமானது? – எதிர்க்கட்சி கேள்வி

சட்டத்தை இயற்றும் பாராளுமன்றமே கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி கூடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சட்டத்தையும் மீறி பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்தவுள்ளதாகவும் இந்த நேரத்தில் இது செய்ய வேண்டிய விடயம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் இந்த வாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். -(3)