செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகை கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அவர்களது அலுவலகமொன்றைப் பேணுவதற்கான செலவினத்தை தீர்வை செய்து கொள்ளும் பொருட்டு மாதத்துக்கு 100,000 ரூபாவினை 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கும், பாராளுமன்றக் கூட்டக் கொடுப்பனவினை ரூ.500இல் இருந்து 2,500 ரூபா வரை அதிகரிப்பதற்குமான யோசனை ஒன்றை பாராளுமன்றில் முன்வைப்பதற்காக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.-(3)




