செய்திகள்
பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு திட்டமிடும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அடுத்த வாரத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசாங்கத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)




