பாலியல் வன்முறைகளுக் கெதிராக இலங்கையின் சகல இன மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக் கெதிராக இலங்கையின் சகல இன மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில்;
இலங்கையில் தற்போது சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றதனை அவதானிக்கமுடிகின்றது கடந்த ஒரு வருடத்திற்குள் மன்னகுளத்தில் சரண்யா புங்குடுதீவில் வித்தியா கொட்டதெனியா சேயா தற்போது வவுனியாவில் ஹரிஸ்னவி என சிறு பிள்ளைகள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்
இவர்களுக்கு எதிராக இகப்பாதக செயல் புரிந்தவர்கள் உடனடியாக கண்டறியப்படல் வேண்டும் எத்தனை காலங்களுக்கு இந்நிலை தொடர்ந்து செல்லும் எங்களுடைய சமூகத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற சு10ழல் யாரால் உருவாகி வருகின்றது? எனவே இந்நிலைமைகள் இனி வருகின்ற காலங்களில் இவ்வாறான அநீதிகள் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.
எமது சமூகம் தீய வழிக்கு செல்வதனை தடுக்கவேண்டும் அரை நூற்றாண்டு காலமாக எமது மண்ணில் எத்தனை அவலங்களை அழிவுகளை நாம் சந்தித்தள்ளோம் எமது உரிமைகளுக்காக எத்தனை இழப்புக்களை சந்தித்தோம் அதனை விளங்கி எமது இனத்தின் மேன்மைக்காக நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய வேளையில் அதிகரித்துள்ள மதுப்பாவனை பழக்கங்களும் போதை பொருள் பாவனையும்இ ஆபாச இணையத்தளங்களும்இ பிரதான அம்சமாக மாறி ஒழுங்கற்ற மிருகத்தனமான சமூகத்தை உருவாக்குகி வருகின்றது.
கட்டுக்கோப்புடன் இருந்துவந்த எமது வட பகுதிகளில் தற்போது தலைவிரித்தாடும் இவ் சமூக அநீதிக்கெதிராக கிராமங்கள் தோறும் அனைவரும் விழிப்புனர்வு கொள்ளவேண்டும் புங்குடுதீவில் வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் முன்னரே வவுனியாவில் ஹரிஸ்னவிக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது இதனூடாக இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கெதிரான சட்டங்களின் குறைபாடுகள் வெளிப்படுகின்றது.
எனவே சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை புரிவோர்க்கெதிராக விஷேட சட்டங்கள் அமுலாக்கப்பட்டு குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததியினர் இவ்வாறான அநீதிகளுக்கு ஆளாகி வருகின்ற நிலமையானது பெற்றோர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளது எனவே இவ்வாறான சிறுவர்களுக்கெதிராக நடாத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை புரிவோர்க்கு எதிராக கடுமையான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
n10




