பாவனைக்குதவாத அரிசிகளைக் கைப்பற்றிய சுகாதாரப் பரிசோதகர்கள்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நகரத்தில் சந்தை தொகுதியில் உள்ள சதோசயிலிருந்து பவானைக்குதவாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வெள்ளை அரிசியும், நாடு அரசியும் பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பிற்பகல் வேளையில் கைப்பற்றியுள்ளனர்.
5 இலட்சம் பெறுமதியான 5000 கிலோ அரிசியினை இவ்வாறு கைப்பற்றியுள்ளனர். பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக விஜயம் பரிசோதனையின் பின் அரிசிகளை கைப்பற்றியள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அரிசியினை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.







