செய்திகள்
பிணை முறி தொடர்பாக விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
தனது டுவிற்றர் பக்கத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இந்த வாரத்திற்குள் அந்த ஆணைக்குழு அமைக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிணை முறி தொடர்பாக கோப் குழு அறிக்கை தொடர்பாக விவாதம் நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




