பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டுமென சட்ட மாஅதிபர் திணைக்களம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அது தொடர்பான முடிவை தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
தாம் புனர்வாழ்வை எதிர்பார்க்கவில்லை எனவும், முழுமையான விடுதலையே தமக்கு வேண்டுமெனவும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 14 பேரும் தங்களின் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விசாரணைகளை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
n10




