‘பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்’: கவிதை நூல் வெளீயீடு
லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் வெளியிடும் தமிழ் உதயாவின் “பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்” கவிதை நூல் லண்டன் ஈலிங் அம்மன் ஆலய மண்டபத்தில் 27.05.2017 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெற உள்ளது.
பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் இந்த நிகழ்வில் வவுனியூர் இரா உதயணன் சிறப்புரை ஆற்றுகிறார். நூல் மதிப்புரையை யமுனா ராஜேந்திரன் செய்கிறார். முருகேசு பசுபதி, சொக்கலிங்கம் யோகலிங்கம், இளையதம்பி தயானந்தா, திருமதி மாதவி சிவலீலன் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றுகிறார்கள்.
இலக்கிய தமிழ் வாசகர்கள் ஆர்வலர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் அழைக்கிறது.