செய்திகள்

பிபிலையில் H1N1 வைரஸ் பரவல் : 28ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

இன்புளுவென்சா H1N1 வைரஸ் தொற்றியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் 28 பேருக்கும் அதிகமானவர்கள் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 கர்ப்பிணி பெண்களும் அடங்குவதாக குறித்த வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த நோயளர்களுக்குகொழும்பிலிருந்து மருந்துகள் கெண்டுவரப்பட்டு; சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிபிலை பிரதேசத்தில் மக்களிடையே இருமல் , காய்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. -(3)