செய்திகள்

பிரசார செலவு தொடர்பாக மகிந்தவிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நாளை அவர் அந்த ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசைகளில் ஒளிபரப்பான பிரசார விளம்பரங்களுக்கான கட்டணங்களை முறையாக செலுத்தாததால் அந்த கூட்டுத்தபானத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் அந்த ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)