பிரதமரால் நாளை விசேட அறிவித்தல்
அடுத்த பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இருந்து இந்த அறிவித்தலை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுடன் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.




