செய்திகள்

பிரதமரின் கட்சி ரணிலுக்கு ஆதரவு!

பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மகஜன எக்சத் பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் பிரதமர் தினேஸ்குணவர்தன தலைமையில் கூடிய மகஜன எக்சத் பெரமுனவின் மத்தியக் குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-(3)