செய்திகள்

பிரதமருடனான விசேட சந்திப்பில் பங்கேற்க மாட்டேன்: சி.வி.விக்னேஸ்வரன்

உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் தமக்கு எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாம் எவ்வாறு பங்கேற்பது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் 3 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் தமக்கு எந்தவித அறிவிப்பும் கிடைக்காததால் சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும், அரசாங்கத்தின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்களை உள்வாங்கும் பொறிமுறை இதன்போது பிரதமர் தெளிவுபடுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5