பிரதமர் ரணில் இன்று இந்தியாவுக்கு விஜயம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
கடந்த வாரம் நியூசிலாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் அந்த விஜயத்தை நிறைவு செய்து இன்று அங்கிருந்து நேராக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை பிரதமர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை 6ஆம் திகதி இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளும் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க அந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார். -(3)




