செய்திகள்

பிரதமர் ரணில் நாளை அவுஸ்திரேலியா பயணம்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை அங்குபயணமாக உள்ளார்.
இலங்கைக்கும் – அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உள்ளிட்ட அமைச்சர்களுடன் மெல்பேர்ன் மற்றும் கென்பரா நகரங்களில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் அவஸ்திரேலியாவுக்கும் இடையிலான நல்லுறவை உறுதிப்படுத்தும் வகையில் பல உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட உள்ளன. -(3)