செய்திகள்
பிரதமர் வேட்பாளர் யார் என்பது விரைவில் வெளியாகும் , மஹிந்த போட்டியிடுவதும் உறுதி : ஶ்ரீ.ல.சு.க தெரிவிப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்துள்ள அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா எப்படியும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று மைத்திரி மஹிந்த அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடனேயே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் இதன்படி அமைக்கப்பட்டுள்ள குழு வெற்றிகரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
எவ்வாறாயினும் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை பெறுத்தமான நேரத்தில் நாம் அறிவிப்போம். ஆனால் மஹிந்த போட்டியிடுவதும் உறுதியாகும். தற்போது வேட்பாளர் பட்டியிலை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் பின்னர் நாம் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவோம். என அவர் தெரிவித்துள்ளார்.




