செய்திகள்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பலத்த பாதுகாப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த மின்னஞ்சல் தொடர்பாக கூகிளிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.




