செய்திகள்
பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க காலமானார்
சட்டம் , ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க (வயது 54)காலமானார்.
இன்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நெரஞ்சன் விக்ரமசிங்க 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளுமன்றுக்குத் தெரிவானதுடன் கடந்த மாதம் 23ம் திகதி சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.




