பிரதி அமைச்சராக விஜயகலா பதவியேற்பு: வெலிக்கடை சிறைக்கும் சென்றார்
மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நேற்று அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அமைச்சில் இடம்பெற்ற விஷேட பூஜைகளின் பின்னர் புதிய பதவியை அவர் பொறுப்பேற்றார்.
விஜயகலா மகேஸ்வரன் நேற்று தனது கடமையை பொறுப்பேற்ற பின்பு வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு விஜயம் செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார்.
கிளிநொச்சியில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான தமிழ்ப் பெண்கள் பலருடன் அவர் உரையாடியார். அவர்களுடைய விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.





