செய்திகள்

பிரதி அமைச்சரொருவர் விரைவில் கைதாவார்?

அரசாங்கத்தின் பிரதி அமைச்சரொருவர் இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவினால் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 15 பேர் இது வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் பிரதி அமைச்சர் ஒருவர் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதன்படி அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் பிரதி அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படும் முதல் சம்பவமாக இது அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)