செய்திகள்

பிரதி அமைச்சர் தெவரப்பெருமவுக்கு அனுமதி மறுத்த பல்கலைக்கழக மாணவர்கள்

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பலித்த தெவரப்பெரும சபரகமுவ பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த போது மாணவர்கள் அமைச்சருக்கு நிகழ்வில் பங்குபற்ற விடாமல் தடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் கட்டடமொன்றை திறப்பதற்கு சென்ற போதே பிரதியமைச்சர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

01குறித்த கட்டடத்தில் மாணவர்களுக்கான எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை என தெரிவித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அரசியல்வாதிகளை முடியாது என தெரிவித்தே மேற்படி அமைச்சர் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தனது வாகனத்தின் மீது ஏறி நின்ற பிரதியமைச்சர் மாணவர்களுடன் பேச முயற்சித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை.
R-06