பிரபாகரனின் படத்துடன் சுவரொட்டியை ஒட்டிய மலர்விழியை உடன் நாடு கடத்த உத்தரவு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தைக் கொண்டுள்ள சுவரொட்டிகளை ஒட்டினார் என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜேர்மனி பிரஜையான யாழ்ப்பாணப் பெண்ணை நாடு கடத்துமாறு கொழும்பிலுள்ள நீதிமன்றம் ஒன்று இன்று உத்தரவிட்டது.
மலர்விழி ஈஸ்வரன் என்ற குறிப்பிட்ட பெண் சுன்னாகம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது பிரபாகரனின் படங்களைத் தாங்கிய சுவரொட்டிகள், திறப்புக் கேர்வைகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டன.
சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பிரபாகரனின் படங்களைத் தாங்கிய சுவரரொட்டிகள் சில காணப்பட்டதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையின் போதே குறிப்பிட்ட பெண் கைது செய்யப்பட்டார். அந்தப் பகுதியில் இருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் பதிவுகளின் மூலம் குறிப்பிட்ட பெண் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று கைதான அவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டார். இன்று கொழும்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகலை குறிறஞ்சாட்டப்பட்ட மலர்விழியை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவிட்டார்.:06




