செய்திகள்

பிரபாகரனிற்கு ராஜீவ்காந்தி வழங்கிய குண்டுதுளைக்காத அங்கி

இந்திய செய்தியாளர் நீனாகோபால் எழுதிய ‘ராஜீவ் காந்தி படுகொலை’ என்ற புத்தகத்தில் இருந்து …

ரோ அமைப்பை சேர்ந்த பலரும், இலஙகையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், கொழும்பின் மேட்டுக்குடியினரும், அரசியல் குடும்பங்களும் செயற்பட்ட விதம் குறித்து வெளிப்படையாகவே தங்கள் ஏமாற்றத்தை பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்கபிரேமதாசா ராஜீவ்காந்தி குறித்து பிரபாகரனிடம் பகையை, வெறுப்பை தூண்டியது குறித்து அவர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பும், கொழும்பில் பாரிய பிரசன்னத்தை கொண்டுள்ள பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐயும் ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராவதை விரும்பவில்லை.

மேலும் இந்தியாவுடனா பகையை தீர்த்துக்கொள்ள விரும்புவர்கள் இலகுவாக தெரிவுசெய்யக்கூடியவராக பிரபாகரன் காணப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே இந்தியா  பிரபாகரனை அலட்சியம் செய்துவந்தது, புளொட் , ஈபிஆர் எல்எவ் போன்ற அமைப்புகளிற்கு அது அதிக முக்கியத்துவத்தை வழங்கி வந்தது.

இந்தியா ஏனைய தமிழ் இயக்கங்களை ஆதரித்துவந்தஅதேவேளை  விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் பலம் வாய்ந்ததாக மாறிவந்தது. பிரபாகரனின் தலைமையின் கீழ் தமிழ்மக்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவந்தது. பிரபாகரன் தமிழர் விவகாரங்களில் தான் ஓரங்கட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்துவந்தார்.

ஓரு கட்டத்தில் புதுடில்லியால் அவரை புறக்கணிக்க முடியாமல் போனது, ஆனால் அவரை கட்டுப்படுத்தி, தங்கள் பிடியின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளின்போதே புதுடில்லி தவறிழைத்தது பெரும் தவறிழைத்தது.

1983 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னரே சந்திரன் பிரபாகரனை அவதானிக்க தொடங்கினார்.  அந்த தாக்குதலே கொழும்பில் பாரிய இனக்கலவரத்திற்கு காரணமாக அமைந்தது. இது தவிர அனுராதபுரத்தில்பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட  சம்பவம்.

1982 இல் மெட்ராசில் புளொட் இயக்க தலைவர் உமாமகேஸ்வரனுடன் இடம்பெற்ற துப்பாக்கி மோதல் சம்பவத்தின் பின்னர் பிரபாகரன் பிணையில் தப்பினார். எனினும் ரோவின் கவனத்தை ஈர்த்தார்.

அதற்கு பின்னர் சுமார்50 போராளிகளுடன் தனது பிரிவினைவாத வன்முறை இயக்கத்தை உருவாக்கிய பிரபாகரன்  எப்போதும் சந்திரனின் கண் பார்வையிலிருந்தார்.

வல்வட்டித்துறையை சேர்ந்த  அந்த கோபக்கார இளைஞனையும் அந்த இளைஞனை சுற்றியிருந்த ஆயுதமேந்திய போராளிகளையும் புரிந்துகொள்ளும் திறன் சந்திரனிற்கு மாத்திரம் உள்ளது என ரோ கருதியது.

1983 இல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவரும்,தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள பகுதியில் அமைந்திருந்த முகாமில் பயிற்சி பெற்றவரும், அதிகம் பேசாதவருமான பிரபாகரன்  முதல் தடவை ராஜீவ்காந்தியை  1985 ம்ஆண்டு சந்தித்திருந்தார், புது டில்லியின் 10 ஜன்பத் இல்லத்தில் யூன் மாதம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

‘‘ அவர் அதிகம் பேசமாட்டார், ஆனால் நீங்கள் சொல்வதை முழுமையாக செவிமடுப்பார்.  நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்களோ அதனை சொல்வதற்கு  இடமளிப்பார். ஆனால் தான் நினைப்பதை ஓருபோதும் பகிர்ந்துகொள்ள மாட்டார். அவர் சீற்றமடையும்போது மாத்திரம் அவர் என்ன நினைக்கின்றார் என்பது உங்களிற்கு தெரியவரும். பிரபாகரனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஓரு விடயம் உள்ளது என்றால் அது துரோகம் மாத்திரம் தான். துரோகமிழைக்கப்பட்டதாக தான் கருதினால் அவர் கடும் சீற்றமடைவார்,முற்றாக மாறிப்போவார், துரோகமிழைத்தவரிற்கு மரணதண்டனையை வழங்குவார் என விடுதலைப்புலிகளின் தவைரின் மனோநிலை குறித்து தெரிவிக்கின்றார்  சந்திரன்.

சந்திரனும் அவரது குழுவினருமே ராஜீவ்காந்தியுடனான முக்கிய கூட்டங்களிற்கு பிரபாகரனை அழைத்துச்சென்றனர், குறிப்பாக  1987 ம் ஆண்டு  யூலை மாதம் 29 ம் திகதி இடம்பெற்ற இறுதி சந்திப்பிற்கும் இவர்களே பிரபாகரனை அழைத்துச்சென்றனர். அந்த சந்திப்பின்போதே விடுதலைப்புலிகளின் தலைவர் தான் ஐக்கிய இலங்கையை ஏற்கிறேன் என வாய்மூலம் ஏற்றுக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்,இது இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று இந்திய இலங்கை ஓப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இடம்பெற்றது. இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுடன் இந்திய பிரதமர் அந்த ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அதன் தனிநாடு குறித்த பிரபாகரனின் கனவை தகர்த்தார்.

அன்று 10,ஜன்பத்தில் இடம்பெற்ற அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் விடுதலைப்புலிகளின் அரசியல்ஆலோசகரும் ஒருவர். அன்றைய சந்திப்பின்போது பிரபாகரன் எவ்வளவு பொறுமையுடன் காணப்பட்டார் என்பதை அவர் பின்னர் விபரித்திருந்தார்.

பிரபாகரன் தான் வெளிப்படையாக இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு ஆதரவளிக்கவேண்டியதில்லை என கருதினாரா அல்லது  ஓரு சில ஆயுதங்களை மாத்திரம் கையளித்தால் போதும் என கருதினாரா?

அல்லது தனது கோபத்தை மறைத்துக்கொண்டு பழிவாங்குவதற்கான காலம் வரும்வரை காத்திருக்க திட்டமிட்டாரா?

அந்த சந்திப்பின்போது ராஜீவ்காந்திக்கு சொந்தமான குண்டுதுளைக்காத அங்கி பிரபாகரனிற்கு வழங்கப்பட்டது. ராஜீவ்காந்தியின் மகன் ராகுல்காந்தி அதனை பிரபாகரனின் தோள் பொருத்தினார் -ராஜீவ்காந்த அவ்வேளை   அவதானமாகயிருங்கள் என தெரிவித்தார்.

அது ராஜீவ்காந்தியின் அறியாமையாகயிருக்கலாம்.