செய்திகள்

”பிரபாகரன் உயிருடன் இல்லை” – இலங்கை இராணுவம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளமையை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் எங்கு இருக்கின்றார் என்பதனை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழ. நெடுமாரன் நேற்று ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட இந்த தகவலை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது.

2019 மே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
-(3)