செய்திகள்

பிரபாகரன் , தமிழீழ உருவ படத்துடன் கண்டியில் டீசேர்ட் மீட்பு

கண்டியில் புடவைக் கடையொன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படமும் மற்றும் தமிழீழ படமும் பொறிக்கப்பட்ட டீசேர்ட் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடைக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட புடவை பொதியொன்றிலிருந்தே இது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த டீசேர்ட்டை கண்ட கடைக்காரர் உடனடியாக கண்டி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் அதனை மீட்டுள்ளதுடன் குறித்த பொதியை அந்தக் கடைக்கு அனுப்பிய நபரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். -(3)