பிரான்சில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார், இருவர் காயம்
பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் அமெரிக்க வாயு நிறுவனம் ஒன்றில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருபப்துடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்லாமிய கொடிகளைத் தாங்கிய வண்ணம் காஸ் நிறுவனத்தை நோக்கி ஓடிய சிலர் அங்கு ஒருவரை அவரது தலையைத் துண்டித்து கொலை செய்ததுடன், அங்கிருந்த வாயுக் குதங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதேவளை, இருவர் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்டவரின் துண்டித்தத தலையை கொண்டு சென்ற ஒரு பயங்கரவாதிகளில் ஒருவர், நிறுவனத்தின் வாயிலில் அந்த தலையை குத்தி வைத்ததாக ஏ . எவ் . பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் தலையில் அராபிய மொழியில் செய்தி ஒன்று எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரனைக்குட்படுத்தப்பட்டுளார்.
இந்த தாக்குதல் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று விபரித்திருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி கொலண்டே பிரசல்ஸில் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் அவர் இந்த தாக்குதலை அடுத்து இன்று மாலை பிரான்ஸ் திரும்புகிறார்.





