செய்திகள்

பிரிக்­கப்­பட முடி­யாத இலங்­கைக்குள் தீர்வு: தமிழ்க் கூட்­ட­மைப்பு முன்வைத்துள்ள யோசனை

பிரி­ப­டாத மற்றும் பிரிக்­கப்­பட முடி­யாத இலங்­கைக்குள் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோச­னையை புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ள அர­சி­ ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வாறு முன்­வைத்­துள்ள யோசனை தொடர்பில் அர­சி­ல­ய­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது எதிர்­வரும் நாட்­களில் கலந்­து­ரை­யாடும் என்று அர­சியல் கட்­சி­யொன்றின் பிர­தி­நி­தி­யொ­ருவர் தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமை வகிக்கும் இந்த பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து கட்­சி­க­ளையும் சேர்ந்த 21 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இடம்­பெ­று­கின்­றனர். அந்த வகையில் இந்த குழு­வா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­பது தொடர்பில் மூன்று பிர­தான விட­யங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கி­றது.

அதா­வது தேர்தல் முறை மாற்றம், இனப்­பி­ரச்­சினை தீர்வுத் திட்டம் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்றம் ஆகிய முக்­கிய மூன்று விட­யங்கள் தொடர்பில் இந்த பிர­தான வழி­ந­டத்தல் குழு ஆராய்ந்து வரு­கின்­றது. அதன்­படி ஏற்­க­னவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்­துள்ள பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்­றது.

கடந்த 07 ஆம் திகதி இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்டம் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது ஆராய்ந்­தி­ருந்­தது. அதன்­படி அண்­மையில் இரண்­டா­வது தட­வை­யா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூடிய இந்த பிர­தான வழி­ந­டத்தும் குழு­வா­னது தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்­தி­ருக்­கின்­றது.

இதன்­போதே பிரி­ப­டாத மற்றும் பிரிக்­கப்­பட முடி­யாத இலங்­கைக்குள் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோச­னையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு முன்­வைத்­தி­ருக்­கி­றது. இது தொடர்பில் எதிர்­வரும் கலந்­து­ரை­யா­டல்­களின் போது ஆரா­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
:06