செய்திகள்

பிரிக்கப்படாத குப்பைகளை சேகரிப்பதை நிறுத்த நடவடிக்கை : நாளை முதல் அமுல்

உக்கக் கூடிய பொருட்கள் , உக்காத பொருட்கள் என பிரிக்கப்படாத குப்பைகளை சேகரிப்பதை நிறுத்துவதற்கு சகல உள்ளுராட்சி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.
இந்த நடைமுறை நாளை முதலாம் திகதி முதல் நாடுபூராகவும் அமுலாகவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதன்படி வீடுகள் , வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் , வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் அனைத்திலும் இந்த நடைமுறை அமுலுக்கு வருமெனவும் இங்கிருந்து குப்பை சேகரிப்போருக்கு கொடுக்கப்படும் குப்பைகள் பிளாஸ்டிக் , கண்ணாடி , உக்கும் பொருட்கள் மற்றும் உக்காத பொருட்கள் என பிரித்து வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாது கொடுக்கும் குப்பைகளை சேகரிக்காது இருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‑(3)