செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரேசா மே பதவி ஏற்பது  உறுதி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து அந்த நாட்டின் தற்போதைய பிரதமரான டேவிட் கமரூன் தான் ஒக்டோபரில் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார் . அதனைத் தொடர்ந்து அவரது அரசின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதக் கட்சியினர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் புதிய பிரதமர் பதவிக்கான வேட்ப்பாளர்களை அறிவித்திருந்தனர். இன்றுவரை பிரித்தானியாவின் உள்விவகார அமைச்சரான திருமதி தெரேசா மே என்பவருக்கும் எரிசக்தி அமைச்சரான திருமதி அந்திரேயா லட்சோம் க்கும் இடையில் பிரதமர் மற்றும் பழமைவாத கட்சியின் அடுத்த தலைவர் பதவிகளுக்கான கடும்போட்டி நிலவியது.

இந்நிலையில் திருமதி அந்திரேயா லட்சோம் தான் புதிய பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். 40% மான பழமைவாதகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே இருப்பதாக தெரிவிக்கப் படுகின்ற போதிலும் அவரது விலகலுக்கான காரணம் அவர் அண்மையில் பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான ‘த ரைம்ஸ் ‘க்கு வழங்கிய நேர்காணலில் தான் ஒரு தாயாக இருப்பதால் புதிய பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று தன்னைக் கருதுவதாக கூறியிருந்தார் .

இக் கருத்து பிள்ளைகள் இல்லாத தெரேசா மேயை குத்திக் காட்டுவதாக சர்சைகள் கிளம்பியதையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என்ற கருத்து பிரித்தானிய பொதுமக்கள் , அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பல்வேறுதரப்பினரிடம் வலுப்பெற்றதைத் தொடர்ந்தே போட்டியிலிருந்து விலகியுள்ளார் .

தனது கருத்து அப்பத்திரிகையால் திரிவுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அதனால் தெரேசா மே ஏற்பட்அட மன வருத்தத்திற்கு தான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாகவும் அந்திரேயா லட்சோம் தெரிவித்திருந்தார் . அந்திரேயாவின் திடீர் விலகல் தெரேசா மே அந்நாட்டின் புதிய பிரதமராக ஒக்டோபரில் பதவியேற்பதற்கு வழிகோலியுள்ளது. இரும்பு சீமாட்டி என்று அழைக்கப்படும் பிரித்தானிவின் ஒரே பெண் பிரதமர் மகிரட் தட்ச்சர் போன்று இரண்டாவது பெண் பிரதமர் தெரேசா மேயும் சிறப்பாக பணியாற்றுவார் என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.