செய்திகள்

பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்காக விண்ணப்பிக்கும் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் அபாயம்: புதிய கொள்கை வெளியானது

ஆறு வருட புகலிட விசாவின் பின்னர் பிரிட்டனில் நிரந்தரமாகவாழ்வதற்காக  விண்ணப்பிக்கும் அகதிகளை அவர்களுக்கு நிரந்தர அனுமதி வழங்குவதா அல்லது அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதா என்பது குறித்து உத்தியோகபூர்வ மீளாய்வின் பின்னார் தீர்மானம் செய்யும் திட்டமொன்றை பிரிட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது என்று பிரித்தானியாவின் த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் ஐந்து வருடங்களிற்கு முன்னர் அடைக்கலம் பெற்ற அகதிகளை அவர்களது நாடுகளிற்கு திருப்பி அனுப்புவது பாதுகாப்பனதா எனஆய்வு செய்யும் இந்த சட்டம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் உடனடியாக நடைமுறைக்கு வரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகதியொருவரிற்கு அவர் வெளியேறுவதற்கான ஆரம்ப கால அவகாசத்தை வழங்கும் சட்டமே 2005 முதல் நடைமுயில் காணப்படுகின்றது. குறிப்பிட்ட கால எல்லை முடிவடைந்தவுடன் குறிப்பிட்ட நபர் விண்ணப்பித்தால் அவரிற்கு நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தின் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்ட அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவது குறித்த மீளாய்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே 2015 இல் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் பிரிட்டனில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டவர்களிற்கு தற்காலிக பாதுகாப்பே வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்துவதாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.

பாதுகாப்பாக திரும்புவது குறித்த ஆய்வுகளை நாங்கள் மேற்கொள்வோம், இதன் மூலம் பிரிட்டனில் பாதுகாப்பாக தங்கியிருப்பதற்கான கால எல்லை முடிவடைந்தவுடன், அல்லது அவர்களின் நாட்டில் தெளிவான முன்னேற்றம் தென்பட்டால் அவர்கள் குறித்து நாங்கள் ஆய்வை மேற்கொள்வோம். அந்த ஆய்வில் தோல்வியடைபவர்கள் கால எல்லைக்கு மேல் தங்கியிருப்பவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரேசா மே அந்த மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

பிரிட்டனில் தஞ்சம் கோரி ஐந்து வருடங்கள் முடிவடைந்த பின்னர் அங்கு நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக விண்ணப்பிக்கும் அகதிகள் அனைவரும் இந்த ஆய்விற்கு தங்களை உட்படுத்தவேண்டியிருக்கும் என பிரிட்டனின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கத்தவறுபவர்கள் காலம்முடிவடைந்த பின்னரும் தங்கியிருப்பவர்களாக கருதப்படுவர், அவர்கள் பிரிட்டனில் தொழில்புரிவதற்கோ அல்லது சலுகைகள் பெருவதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள், நாட்டிலிருந்து திருப்பி அனுப்பபடுவார்கள் எனவும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உத்தரவு மார்ச் 9 ம் திகதியே பதிவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ள உள்துறை அலுவலகம் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டவர்களிற்கு அங்கு நிரந்தரமாக தங்குவதற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது பாதுகாப்பாக திருப்பி அனுப்பும்உத்தரவை புதிய பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் பிரகடனம் மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் கீழ் எங்களிற்கு உள்ள சர்வதே கடப்பாட்டை நிறைவேற்றவே உத்தரவை பிறப்பித்துள்ளோம்.இதன் கீழ் நாங்கள் எங்கள் பாதுகாப்பை நாடுபவர்களிற்கு அகதிகள் அந்தஸ்த்தை வழங்குவதுடன் அவர்கள் வெளியேறுவதற்கான பொருத்தமான கால அவகாசத்தையும் வழங்கவேண்டியுள்ளது, எனவும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தேவைப்படும் வரை அதனை வழங்குவதற்காகவே பாதுகாப்பாக திரும்புவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது,அதேவேளை பாதுகாப்பு தேவைப்படாதவர்கள் பிரிட்டனில் தங்கியிருப்பதற்கான விண்ணப்பிக்கும்போது வேறு காரணங்களை முன்வைக்கவேண்டும் அல்லது இங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த புதிய கொள்கைக்கு அகதிகள் பேரவை கடும் எதிர்ப்பை உடனடியாக வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை தங்களிற்கு பாதுகாப்பில்லை என்பதை உரிய விதத்தில் நீருபித்துள்ள அகதிகள் தங்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முடியாத நிலையை இந்த சட்டம் உருவாக்கும். தாங்கள் எப்போதும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்துடன் அவர்கள் வாழும் நிலையை ஏற்படுத்தும் என அகதிகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட சட்டம் பிரிட்டனில் உள்ள அகதிகளின் நிலையை அச்சுறுத்துகின்றது,அகதிகள் மேலும் ஐந்து வருடங்களிற்கு நிச்சயமற்ற நிலையில் வாழும் நிலையை ஏற்படுத்துகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Refugees applying to live in UK face being sent home after five years

Related News