பிரிட்டனில் வன்முறை கும்பல்களால் தொடர்ந்தும் பதற்றம்!
பிரித்தானியாவில் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஃபார் றைஜிற் (FAR-RIGHT) என்று அழைக்கப்படும் கடும் இனவாதப் போக்கு கொண்ட குழு, லண்டனில் பல நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுமார் 13,000 பேர் அடங்கிய வெள்ளை இனவெறியர்களின் வாட்ஸ் அப் சட்டில், ஹரோவில் உள்ள ஹாலிடே- இன் விடுதியை தாக்குதவது தொடர்பாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரோவில் அமைந்துள்ள ஹாலிடே இன் ஹோட்டலில், பல அகதிகள் தங்கி உள்ளார்கள். இது போக ஹரோ நகரில் பல தமிழர்கள் வசித்தும் வருகிறார்கள்.
தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




