செய்திகள்

பிரித்தானியா,இந்தியாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு  அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி எதிர்வரும் 11 ஆம் திகதி பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள், வர்த்தக மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி  ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ள கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே அவர் இந்தியா செல்லவுள்ளார்.

இதன்போது. இருநாடுகளின் தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

n10