பிரித்தானிய தேர்தல் முடிவுகள்: கன்சர்வேட்டிவ் முன்னிலையில்
பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பாரளுமன்றத்துக்கான தேர்தலில் மொத்தம் 650 ஆசனங்களில் 605 ஆசனங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 301 (46%) ஆசனங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. தொழில்கட்சி 222 (34%) ஆசனகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இதேவளை, ஸ்கொட்லாந்து தேசிய கட்சி 56 ஆசனங்களையும்( 9%), லிபரல் டெமோகிரட்ஸ் 8 ஆசனங்களையும் (1%), பிரித்தானிய சுதந்திர கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. கண்செர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு 323 ஆசனங்களை பெறவேண்டும்.
இதேவளை, தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.




