பிரித்தானிய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர் பிரிட்டனில் பிறந்த ‘ காலித் மசூத்’
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தியவர் பிரிட்டனில் பிறந்த 52 வயதுடைய காலித் மசூத் என்றும் முன்னர் ஒருதடவை அவர் பிரிட்டனின் MI15 உளவுப்படையினால் வன்முறை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளில் ஈடுபட்டமை மற்றும் கரிய ஆயுதங்களை வைத்திருந்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காலித் மசூத் பொலிஸாருக்கு அறியப்பட்டவர் என்றும் ஆனால் அண்மையில் எவர் எந்தவித கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்து உயிர்காப்பு இயந்திரத்தின் உதவியுடன் சிகிர்சை அளிக்கப்பட 75 வயதுடைய நபர் ஒருவர்க்கு உயிர்காப்பு இயந்திரம் அகற்றப்பட்டமையை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஐ. எஸ் ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது ஆனால், காலித் மசூத் பற்றி இந்த உரிமை கூரலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.




