பிரித்தானிய பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது: வெளிநாட்டவர்களும் காயமடைந்தனர்
முக்கிய குறிப்புக்கள்
1. வெஸ்மினிஸ்டர் பாலத்தில் பாதசாரிகளை இடித்துத்தள்ளிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றது
2. பாதசாரிகள் பலர் காயம் அடைந்தனர். ஒரு பெண் தேம்ஸ் நதியில் இடித்தது வீழ்த்தப்பட்டார்.
3. மூன்று பேர் பாலத்தில் பலியாகினர் . 40 பேர் காயம் அடைந்தனர்.
4. காரை ஓட்டிச்சென்ற நடுத்ததா வயதுடைய ஒரு ஆசியாவை சேர்ந்த நபர் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து கடமையில் நின்ற பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றான். உயிரிழந்த பொலிஸார் 15 வருடகாலம் கடமையாற்றிய திருமணமான 48 வயதுடைய கீத் பால்மர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
5. தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பின்னர் பொலிஸாரால் சுடப்பட்டு வைத்தியாசாலைக்கு கொண்டுசெல்கையில் உயிரிழந்தார்.
6. பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டு பிரதமர் கார் ஒன்றின் மூலம் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டார்.
7. காயம் அடைந்தவர்களின் பிரான்ஸ் மாணவர்களும் கொரிய நாட்டு உல்லாச பயணிகளும் அடங்குவர்.
தொடர்புடைய செய்தி:
http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/




