செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: நால்வர் பலி; 20 பேர் காயம்

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடததியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு நடக்கிறது.

மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதன் துணை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

இத்தாக்குதலை பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் கண்டித்துள்ளது.

லண்டன் மாநகர வீதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாநகர காவல்துறையும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை “பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
பன்னாட்டுத் தலைவர்கள் பிரிட்டனுக்கு தமது ஆதரவை தெரிவிததுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்றவும் அவர்கள் சூளுரை.

2 3