செய்திகள்

பிலவுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்பட்டன: பல வருடங்களின் பின்னர் தமது காணிகளுக்குள் செல்லும் மக்கள்

முல்லைத்தீவு -கேப்பாப்புலவு- பிலவுக்குடியிருப்பில் கடந்த ஒருமாதகாலமாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு இன்று வெற்றி கிட்டியது. விமானப்படையினரிடம் வசம் இருந்த மக்களின் பெரும்பகுதி காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த தனது முகாமை விமானப்படையினால் வேறு இடத்துக்கு நகர்த்தி வருகின்றனர்.

54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த காணிகள் இன்று 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது காணிகள் வீடுகளுக்குள் செல்லத்தொடங்கியுள்ளனர்.

இதேவேளை 54 ஏக்கரில் 42 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காணிகளையும் விடுவிக்கும் போராட்டம் தொடர்கிறது.

keppaappulavu 2