செய்திகள்

பிள்ளைகள் விளையாடுவதற்கான இடங்கள் உடல்களை புதைக்கும் இடங்களாகியுள்ளன

நன்றி ஸ்கை நியுஸ்- தமிழில் சமகளம்

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக உள்ள ரக்காவின் சிறுவர்கள் கடும் மன அழுத்தம் மற்றும் உளவியல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

பல சிரிய சிறுவர்களின் மனதில் ஆழமான உளவியல் தழும்புகள் உள்ளன அவை மாறுவதற்கு பல வருடங்களாகலாம் என சேவ் த சில்ரன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ள ரக்காவில் கல்வியும் விளையாட்டும் நின்றுபோயுள்ளன.அங்கு வாழும் 13 வயது சிறுவன் ஓருவன் விமானக்குண்டுவீச்சும் துண்டிக்கப்பட்ட தலைகளுமே நாளாந்த நிகழ்வாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளான்.

பிள்ளைகள் விளையாடுவதற்கான இடங்கள் தற்போது ஐஎஸ் அமைப்பினால் தலைதுண்டிக்கப்பட்ட உடல்களை புதைப்பதற்கான பகுதிகளாக மாறியுள்ளன.

சிலநாட்களிற்கு முன்னர் ஐஎஸ் அமைப்பினர் தலைகளைதுண்டித்துவிட்டு உடல்களை அப்படியே விட்டுவிட்டு சென்றனர் என ரசிதா தெரிவித்தாள்.

நாங்கள் அதனை பார்த்தோம் எங்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை நான் நித்திரை கொள்ள விரும்புகின்றேன். ஆனால் அன்று நான் பார்த்த காட்சிகள் காரணமாக என்னால் நித்திரை செய்ய முடியவில்லை என அவள் குறிப்பிட்டாள்.

Displaced children from the Islamic State (IS) group's Syrian stronghold of Raqa, attend the first day of the new school year at a camp for internally displaced people in Ain Issa on August 22, 2017.  / AFP PHOTO / Delil souleiman        (Photo credit should read DELIL SOULEIMAN/AFP/Getty Images)

பெண்கள் ஏதாவது தவறு செய்தால் அந்த பெண்ணை கல்லால் எறிந்து கொலை செய்கின்றார்கள் என தெரிவிக்கின்றாள் 13 வயது பரீதா. அந்த பெண் மரணிக்கும்வரை அவர்கள் கல்லால் எறிந்துகொண்டிருப்பார்கள் என அவள் தெரிவிக்கின்றாள்.

அவர்கள் அந்த பெண்ணின் கையை காலை ஏன் தலையை கூட துண்டித்துவிடுவார்கள் என தெரிவிக்கும் அந்த சிறுமி யாராவது சிகரெட் பிடித்தால் சிகரெட் பிடித்த விரலை துண்டிக்கிறார்கள் எனவும் குறிப்பிடுகின்றாள்.