செய்திகள்

பீல்ட் மார்­ஷ­லுக்கு வேறு யோசனை தோன்றி விட்டால் என்ன செய்வது? விமல் வீரவன்ச கேள்வி

நாட்டில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட சபா­நா­யகர் ஆகிய மூவரும் இன்று நாட்டில் இல்லை. இந்­நி­லையில் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சே­கா­விற்கு வேறு யோசனை தோன்றி விட்டால் என்ன செய்து என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

எமது ஆட்சிக் காலத்தில் ஜனா­தி­பதி இல்லை என்றால் பிர­தமர் நாட்டில் இருப்பார். ஆனால் தற்­போது யார் நாட்டில் இருக்­கின்­றனர் என்­பது யாருக்கும் தெரி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று திங்கட் கிழமை நடை­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச இவ்­வாறு தெரி­வித்தார். இவர் இங்கு தொடர்ந்­தும் ­கூ­று­கையில்,

எந்­த­வொரு நாட்­டிலும் இவ்­வாறு நடை­பெ­றாது. ஜனா­தி­பதி இல்லை என்றால் பிர­தமர் நாட்டில் பொறுப்­புக்­களை ஏற்று செயற்­ப­டுவார். ஆனால் இலங்­கையில் தற்­போ­துள்ள நல்­லாட்­சியில் யார் நாட்டில் இருக்­கின்­றனர் என்­பது யாருக்கும் தெரி­யாது. ஜனா­தி­பதி நாட்டில். பிர­த­மரும் நாட்டில் இல்லை.

போதா­தற்கு சபா­நா­ய­கரும் நாட்டில் இல்லை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சே­கா­விற்கு வேறு யோசனை தோன்றி ஆட்­சியில் கைவைத்து விட்டால் என்ன செய்­வது. எனவே பொறுப்­பற்ற செயல். வீதியில் செல்கின்றவர்களை அழைத்து அந்த பதவிகளை கொடுக்கவா ? அந்த நிலைமைக்கே நாடு வந்துள்ளது என குறிப்பிட்டார்.
R-06