புகையிரதத்துடன் கொள்கலன் மோதி விபத்து
முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரிகட்டிய பிரதேசத்தில் புகையிரதத்துடன் கொள்கலன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரதமும் கொள்கலன் ஒன்றும் இவ்வாறு மோதிக் கொண்டதில் புகையிரதத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் கொள்கலன் குடைசாய்ந்துள்ளதுடன், புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளன.
இதன் காரணமாக புகையிரதத்தின் இரண்டு சாரதிகள், கொள்கலனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
n10




