செய்திகள்

புகையிலை கட்டுபாட்டு கொள்கைக்கு சவால் விடும் முயற்சிகளை தோற்கடிக்க ஒன்றுபடுவோம் : FCTC மாநாட்டில் ஜனாதிபதி

புகையிலை கட்டுப்பாடு பற்றி முன்னெடுக்கப்படும் கொள்கைகளுக்கு சவால் விடுக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
புகையிலை பாவனை கட்டுப்பாடு பற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்தியாவில் நடத்தப்படும் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் FCTC யின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை 2005ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளோம்.FCTCயில் கைச்சாத்திட்டு உறுதிப்படுத்திய தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் உள்ள முதன்மையான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.FCTCக்குஏற்ப நாம் 2016ஆம் ஆண்டில் எமது புகையிலை மற்றும் மதுசார சட்டத்தை நிறைவேற்றி புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபையை அமைத்தோம். இது Nயுவுயு என அழைக்கப்படுகிறது. எமது Nயுவுயு வானது புகையிலை மற்றும் மதுசாரம் இரண்டையும் உள்ளடக்கிய ஒரே நிறுவனம் என்ற வகையில் அது தனித்துவம் பெற்று விளங்குகிறது. இதற்கு சில வரலாற்று மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன.
2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் எனது தேசிய நிகழ்ச்சிநிரலில் புகையிலை மற்றும் மதுசாரத்தை ஒழிப்பது முதலிடத்தில் இருந்தது. போதைப்பொருள் தொடர்பாக கண்காணிப்பதற்கு ஒரு ஜனாதிபதி செயலணியை நான் அமைத்தேன். உண்மையில் தொடர்புடைய எல்லா தரப்பினர்களுடனும் ஒரு மாதாந்த மீளாய்வு கூட்டத்தை நடத்தி அதன் முன்னேற்ற நிலைமைகளை மதிப்பீடு செய்வதுடன், பல்தரப்பு கொள்கைத் திட்டங்களையும் வகுத்தோம். குஊவுஊ யின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நான் புகையிலை வரிக் கொள்கைகளை மீளாய்வு செய்ததுடன், ஒரு மாதத்திற்கு முன்னர் புகையிலை வரியை மீண்டும் 10 வீதத்தால் அதிகரித்துள்ளோம். எனது சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன வெற்றுப் பக்கற்றுகளை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை முன்மொழிந்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப உதவிகளுக்கு குஊவுஊ க்கும் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். வெற்றுப் பக்கற்றுகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளின் பாடங்கள் மற்றும் அனுபவங்களிலிருந்து நாம் பயன் பெற்றுக்கொள்கிறோம். நாம் வளி மாசடைதல் சட்டங்கள், பொது இடங்கள் மற்றும் மூடிய வெளிகளில் புகைத்தலை தடை செய்தல் மூலமும் மற்றும் பல்வேறு வழிகளிலும் புகையிலைப் பிரச்சினையை தீர்த்து வருகிறோம்.
புகையிலைக்கான விளம்பரம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான நாடுகளைப் போன்று புகையிலைத் துறை பின்தங்கிய குழுக்களிடத்தில் குறிப்பாக பாடசாலை பிள்ளைகளிடத்தில் புகையிலையை ஊக்குவிப்பதில் சூட்சுமமான உத்திகளை கைக்கொண்டு வருகின்றது. எமது எல்லாப் பணிகளிலும் நாம் குஊவுஊ மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை பெற்று வருகிறோம்.
உலக சுகாதார தாபனம் மற்றும்FCTC இன் உதவியுடன் நாம் தொடராக மக்கள் மத்தியில் புகையிலைப் பாவனை தொடர்பாக கிரமமாக கண்காணித்து வருகிறோம். இலங்கை இவ்வருட ஆரம்பத்தில் பூகோள இளைஞர் புகையிலை ஆய்வை செய்து முடித்திருப்பதுடன், இளைஞர்கள் மத்தியில் புகையிலை பாவனை மற்றும் புகைத்தல் குறிப்பிடத்தக்களவு குறைந்திருப்பது கடந்த ஆய்வுடன் ஒப்பிடுகின்றபோது தெரியவருகின்றது. தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள உலக சுகாதார தாபனத்தின் ளுவுநுPளு ஆய்வு வளர்ந்தவர்களுக்கு மத்தியிலான புகைத்தலும் குறைந்திருப்பதை காட்டுகிறது. இந்தப் பெறுபேறுகள் மகிழ்ச்சியளித்தபோதும் இலங்கையில் இன்னும் அதிகமானவர்கள் புகைக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதால் நாம் முழுமையாக திருப்தியடையும் நிலையில் இல்லை. உங்களோடு சேர்ந்து பொதுச் சுகாதாரப் பிரச்சினையான புகையிலையை வெற்றிகரமாக ஒழித்துக்கட்டும் வளர்ந்துவரும் ஒரு பொருளாதார நாடாக இலங்கை முன்னேற்றம் அடையும்.
இலங்கை சுகாதாரத்துடன் தொடர்புடைய பரந்துபட்ட பிரச்சினைகள் குறித்து மிகவும் கரிசனையோடு உள்ளது. எனவே நாம் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மிகவும் பாரதூரமாக எடுத்துள்ளோம். சுகாதாரத்துடன் தொடர்புடைய கொள்கைகள் சட்டதிட்டங்களுக்கு மேலதிகமாக கல்வி, வர்த்தகம், உணவு, விவசாயம் மற்றும் சுற்றாடல் போன்ற துறைகளிலும் தொற்றாத நோய் இடர் காரணிகள் பல முக்கிய இடத்தை கொண்டுள்ளது. எனவே தொற்றாத நோய்களுக்கான பொதுவான திருத்தப்படத்தக்க இடர் காரணங்களுக்கு ஆளாகும் அளவை குறைப்பதற்கு பொருத்தமான ஒருங்கிணைந்த கொள்கை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். -(3)