‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ – இலண்டனில் ஆவணப்பட வெளியீடு
‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ என்ற ஆவணப்படம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 22 மே 2016 ) மாலை 5. 30 மணிக்கு ஹரோ கவுன்சில் அவையில் ( Harrow Council Chamber, London Borough of Harrow, Civic Centre, Station Road, Harrow, HA1 2XY) வெளியிட்டுவைக்கப்பட்டு திரையிடப்படவிருக்கிறது.
இந்த ஆவணப்படம் மூன்று தசாப்த்தங்களாக இடம்பெற்ற ஆயுத யுத்தத்தினாலும், புங்குடுதீவில் வாழ்ந்த மக்களின் பாரிய உள்ளூர், வெளியூர் இடப்பெயர்வுகளினாலும் தற்பொழுது புங்குடுதீவு எதிர்கொண்டுள்ள நிலம்சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்துகின்றது. புங்குடுதீவில் தற்பொழுது வாழும் மக்கள் தமது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்கின்ற பல பிரச்சினைகளை இந்த ஆவணப்படும் நிலத்தோடு தொடர்படுத்தி ஆராய்கின்றது.
கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியற் துறையில் கலாநிதிப்பட்ட ஆய்வு செய்துவரும் தங்கேஸ் பரம்சோதி இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இந்த ஆவண வெளியீட்டில் புங்குடுதீவு பற்றிய ஒளிப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல், கானொலித் தட்டு வெளியீடு, விமர்சன உரை, பொதுக் கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுக்கு கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை. அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த ஆவணப்படம் பற்றிய விவரண காணொளிகளை கீழே காணலாம்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=84QZESWfKtE” width=”500″ height=”300″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=7t4B9LyG7Ug” width=”500″ height=”300″]




