செய்திகள்

புதிய அரசயலமைப்பு தொடர்பாக கருத்திணையறியும் யோசணை குழு மன்னாரில் பதிவுகளை மேற்கொண்டது

புதிய அரசயலமைப்பு தொடர்பாக கருத்திணையறியும்  யோசணை  குழு  இன்று இரண்டாவது தினமும்  மன்னாரில் பதிவுகளை மேற்கொண்டது

 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்திணை அறியும் ஆலோசணை குழு இன்று வியாழக்கிழமை இரண்டாவது தினமும்  (10) காலை அதன் பதிவுகளை மன்னார்; மாவட்ட செயலகத்தில்  ஜய்கா மண்டபத்தில் மேற்கொண்டது.  

லால் விஜயநாயக்க தலைமையில் பதிவகளை மேற்கொண்ட குழுவில் எஸ்.தவராசா மற்றும் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பதிவுகளை மேற்கொண்டனர்.   

இரு தினங்கள் காலை 9.30 மணிமுதல்  மாலை 4:30 வரை  பதிவுகள் மேற்கொள்ளபட்டது. 

இன்று 101 பிரதிநிதிகள் தமது கருத்தினை பதிவு செய்திருந்தனர். 

இதேவேளை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்டான்லி டி மெல்இ உதவி மாவட்ட செயலாளர் பவாகரன் ஆகியோரும் கலந்து கொன்டனர்.  

தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு தொடர்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சேர்க்கப்படவேண்டிய ஆலோசணைகள் பெறுவது தொடர்பாக  மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிம் இருந்து வந்திருந்த மக்கள் தமது கருத்திணை குழு முன்னிலையில பதிவுசெய்தனர்.

இதேவேளை மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் அரசியல் யாப்பு சம்பந்தமாக பல கருத்துக்கள் மன்வைக்கப்பட்டது.

ஆதணை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரனுடன் அணைந்து மன்னார் மறைமாவட்ட குரு மதல்வர் விக்டர்சோசை, ஆயர் அல்லத்தின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன், மன்னார் பிரஜைகள் குழுவின்தலைவர்அருட்தந்ஐ செபமாலை  உள்ளிட்ட  அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு தெரிவித்திரந்தனர்.

இதனை அடுத்து அது தொடர்பாக விபரம் அடங்கிய  ஆவணம்  கருத்திணை பதிவு செய்யும் குழுவின் தலைவரிடம் வழங்கப்பட்டது.

குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் பின்வருமாறு

1. அரசின் நிலையியல்

சுயநிர்ணய உரிமையுடைய தன்னாதிக்க இறைமை கொண்ட மாநில வாரியங்களின் கூட்டமைவு (சமஷ்டி)

2. அரசாங்கத்தின் கட்டமைப்பு

பிரித்தானியாவில் உள்ள வெஸ்மினிஸ்ரர் முறைமை போல் இரு அவைகளைக் கொண்டதாகவும் அதாவது பாராளுமன்ற கட்டமைப்பில் பொதுமக்கள் பிரதிநிதிகள் சபையும் மாநிலங்களின் ரீதியான சபையும் உ10ம் மக்களவை, மாநிலங்களவை சனாதிபதி அரசாங்கத்திற்கு தலைவராக இருப்பார்.

3. அரசியல் அமைப்பின் அடிப்படைக் கோர்ப்பு. 

1. ஒழுங்கு முறையாக நிறை நிலைப்படுத்தப்பட்டதாக யாப்பு அமைந்திருத்தல் அவசியம்.

2. நீதி நிர்வாகம் கருத்துரைப்பு ஆகியவை சுயாதீனம் கொண்டவையாக அமைதல் அவசியம்.

3. பாராளுமன்ற சனநாயகத்தில் உச்ச வரவேற்பு பெற்றிருத்தல்.

4. பல்லின சமய சமூக மொழித்துவ முரண்பாட்டை சமப்படுத்துபவையாக அமையப்பெறல்.

5. இனத்துவ ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமநிலை பேணுதல் அவசியம்.

6. சமச்சீர் கட்டமைப்பில் உள்ளக வெளியக முரண்பாடு தோன்றின் நீதிப் பரிபாலனத்தினூடாக நிர்ணயப்படுத்திக் கொள்ளல்.

7. மாநில தனித்துவ தத்துவார்த்தத்தை ஏற்புடமையாக்குதல்.

8. சிங்களம் தமிழ் அரச கரும மொழியாக இருத்தல் அவசியம். 

4. மாநில நிர்வாக முறைமைகள். 

1. நாட்டின் அரசியல் அமைப்பை மீறாத வகையில் சட்ட உருவாக்கல் தன்மையைக் கொண்டிருத்தல் காணி, பொலிஸ் அதிகாரத்துடன்

2. மாநிலவாரியான சுய சமூக மொழித்துவத்திற்கு அமைவாக குறித்த ஒவ்வொரு இனக்குழுமத்திற்கும் அடிப்படையில் எந்தவிதமான பாதிப்பும் நிகழாத வகையில் அவர்களது பண்பாட்டியலை வழிசமைத்து வாழ்வியல் இடர்கள் ஏற்படாவண்ணம் சிறுகுழுமம் தொடக்கம் பன்முகம் வரை அவரவர் நிலையியலுக்கு ஏற்ற வலுவேறாக்கல் கட்டமைப்புக்களை நிலையான நிர்ணயத்துடன் ஸ்திரப்படுத்திக் கொள்ளுதல் ஒவ்வொரு மாநிலத்தினதும் தார்மீக பொறுப்பேற்றலாக விதிக்கப்படல் வேண்டும். 

5. சட்டவாக்கச் சபை 

1. இரண்டு அவைகளைக் கொண்டதாகக் காணப்பட வேண்டும்.

2. மக்களவை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.

3. மாநிலங்களவை – மாநில ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முறையில் அதிகம் துறைசார்ந்த புத்தி ஜீவிகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது ஆகும்.                     

6. பாராளுமன்றின் செயற்பாடு 

1. பாராளுமன்றம் உயர்நிலையைக் கொண்டிருந்தாலும் பொதுமக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். அத்துடன் அரசியல் யாப்பிற்கும் அதன் அதிகாரத்திற்கும் குந்தகம் ஏற்படாத வண்ணம் பாராளுமன்ற நிலையியல் கொண்டிருக்க வேண்டும்.

2. ஒரு நாட்டின் அடிப்படை அரசியல் அமைப்பே அதனை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மீள் திருத்தங்கள் செய்வது சனநாயக மரபுக்கு ஏற்புடையது அல்ல. உ10ம் அமெரிக்கா

3. ஆட்சியாளர்களின் சுய விருப்பங்களின் அடிப்படையில் மாநில இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தல் முறையல்ல.

7. அதிகாரப் பகிர்வு

தேசிய பாதுகாப்பு பன்னாட்டு தொடர்பு, சர்வதேச கடல் நியமம், நெடுந்தூர போக்குவரவு ஆகாயமார்க்கம் இவை தவிர்ந்த ஏனையவை மாநில அரசுகளுடன் அதிகாரப்பகிர்வும் சில துறைகளில் அதிகாரப் பரவலாக்கமும் அதாவது சில துறைகளில் மத்தியும் மாநிலமும் இணைந்து செயல்படுதல் வேண்டும். ஆனால் மாநில தன்னதிகாரத்தில் மத்தி தலையிடுதல் அவசியமற்றது என குறிப்பிடல் வேண்டும்.

8. நீதிப் பரிபாலனம்

ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படல் வேண்டும்.

அவை சுயாதீனமாக செயற்படுவதற்கும்

அரசியல் சார்பில்லாத ஆணைக்குழுக்கள் மூலம் பணி நிரப்புக்கள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

இதில் அரசியல் அமைப்பு நீதிமன்றமும் நிறுவப்படுதல் வேண்டும் ஏனெனில் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும்.

9. சுயாதீன ஆணைக்குழுக்கள்

அரசியல் யாப்பு நிர்ணயத்தில் அடிப்படையில் சுயாதீன ஆணகை;குழுக்கள் சகல துறைகளுக்கும் மத்திய சட்டவாக்க பிரதிநிதிகளையும் உள்ளடக்கி கட்சி அரசியல் கடந்து சனநாயக மரவு பண்புசார் நெறிமுறைகளுடன் அதன் நிலையியலை நேர்மையாக கையாளக் கூடியவர்களை உள்ளடக்கிய முறையில் இன விகிதாசாரத்திற்கு அமையவும். சிறந்த புத்தி ஜீவிகளையும் உள்ளடக்குதல் அவசியமாகும்.

10. தேர்தல் சீர்திருத்தம்

1. பல்லின சமூகத்தைக் கொண்ட ஒரு நாடாக காணப்படுவதால் பொதுமக்களின் வாழ்வியல் செறிவுக்கு அமைவாக இன விகிதாசாரம் மற்றும் தொகுதி வாரியான தேர்தல் முறைமையும் உள்ளீர்க்கப்பட்டு கலப்பு முறைமை உருவாக்கப்படுதல் வேண்டும்.

2. பெண்களிற்கு பாராளுமன்றம் ஃ மாநிலம் ஃ உள்ளுராட்சி மன்றங்கள் ஆகிவற்றிற்கு அதிக அங்கத்தவர்களை உள்ளீர்ப்பதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

3. அவ்வாறே இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட திறன் நிபுணத்துவமுடையவர்களிற்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.

4. தேர்தலில் இனவாதம் மதவாதம் பிரயோகிப்பது அரசியலமைப்பு ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும்.

5. சமூக முறைமைக்கு மாறாக செயலாற்றுபவர்களை மீளழைக்கும் முறை உருவாக்கப்பட வேண்டும். அதாவது அதிகார வலுவிழப்பு முறை ஏற்படுத்த வேண்டும்.

6. மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவை உருவாக்குதல் வேண்டும். வசிப்புரிமை, கல்வித்தகைமை, இலஞ்ச ஊழல், பாலியல் குற்றச்சாட்டு அதிகார துஸ்பிரயோகம் போன்றவை இல்லாதிருப்பவர்களாக இருக்க வேண்டும்.

11. சனாதிபதி

1. பாராளுமன்ற முறைமையின் கீழ் செயலாற்றுதல் வேண்டும். சம்பிரதாய பூர்வமான சனாதிபதியாக பணியாற்றுதல் வேண்டும். உ10ம் இந்திய குடியரசின் சனாதிபதி முறைமைக்கு ஒப்பானதுவாகும். சர்வாதிகார சனாதிபதி ஆட்சிமுறை முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

2. பிரதமர் மற்றும் அமைச்சரவையே மாநில அரசுகளுடன் கூட்டுறவு நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். 

12. சிறப்பு அம்சம்

தமிழர் தாயகத்தின் எதிர்காலம்

கடந்த ஆறு தசாப்தத்திற்கு மேற்பட்ட இனமுரண்பாட்டு சமத்துவமின்மை சனநாயக அத்துமீறல் அடக்கி ஆளும் மேட்டிமைத்தனம் எதேச்சதிகார ஏகாதிபத்தியம் சிங்கள பௌத்த நாடு எனும் மேட்டிமைத்தனம் எனும் வாதங்கள் உருவூட்டப்பட்டதன் விளைவே பல இலட்சங்கணக்கான உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்தது. பல ஒப்பந்தங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டன. வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதனால் நம்பிக்கையற்றவர்களாகி விட்ட நிலையே காணப்படுகின்றது.

எனவே எதிர்காலத்தில் ஐக்கிய இலங்கைக்குள் சமச்சீரான அதிகாரப் பரவலாக்க முறையினூடாக எங்களை நாங்கள் ஆழுகி;றவர்களாக வடகிழக்கு தாயகம் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் ஆகிய உரிமைகள் தன்னகத்தே கொண்ட சிறப்பதிகார அலகு பூரண சமஷ்டி அதிகார முறைமை உ10ம் சுவிஸ், கொசோவா போன்ற நாடுகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்புப் போல் வரன் நெறிமுறை நீதி தவறினால் இணைந்து வாழ்தல் என்பது குந்தகம் ஏற்படும் எனவே சுதந்திர வாழ்வுரிமைக்காகப் போராடிய இனம் சமஷ்டி கோருவது எந்த வகையிலும் தவறாக முடியாது.

ஆகவே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு தமிழ் மாநில அரசாக்கப்பட்டு அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இணையான அதிகார பங்கீடு வழங்குவதுடன் அவர்களது தனித்துவ நிர்ணயியலையும் உள்ளீர்ததுக் கொள்வது அவசியமாகும்.

அத்துடன் இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது போல் வடகிழக்கு பகுதிக்கும் வழங்குவதுடன் இல்லையேல் பிரித்தானிய ஆதிக்கத்தில் உள்ள ஸ்கொட்லாந்திற்கு உள்ள தனித்து இராட்சிய அங்கீகாரத்தையாவது வழங்க வேண்டும்.

எனவே சிங்கள மக்கள் சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு உருவாக்கத்தை தடுப்பார்களாயின் மறுபடியும் பிரிவினைவாதம் மேலெழக் கூடிய ஏதுவான நிலை தோன்றலாம் இதை சிங்கள தேசம் புரிந்து கொள்ள வேண்டும். 

IMG_8848 IMG_8944